விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் (16 வயது) மீரா தற்கொலை செய்துகொண்ட நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விஜய் ஆண்டனி, குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் வசித்து வருகிறார். அவரது மகள் மீரா அண்ணாசாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் மீரா படுக்கை அறைக்கு சென்றார். இன்று அதிகாலை மகளை பார்ப்பதற்காக விஜய் ஆண்டனி சென்றபோது, மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடந்துள்ளார். வீட்டுப் பணியாளரின் உதவியுடன் மீராவின் உடலை மீட்டு காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரின் உடலைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவரது தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியாத நிலையில், மைலாப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீராவின் உடல், உடற்கூராய்விற்காக ஓமந்துரார் வளாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என இரு மகள்கள் இருந்த நிலையில், மீரா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com