விஷால்
விஷால்

விஷால் புகார்: திரைப்படத் தணிக்கை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

நடிகர் விஷால் கூறிய புகாரின் அடிப்படையில், லஞ்சம் பெற்ற திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்துள்ளது.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் இதுவரை ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங், திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு தவணைகளாக தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஷாலின் இந்தக் குற்றச்சாட்டு திரைப்படத் துறையினரிடம் மட்டுமின்றி ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், லஞ்சம் பெற்ற திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. இன்று வழக்கு பதிந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com