ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

சிவாஜி குடும்பத்து மாப்பிள்ளையாகும் ஆதிக் ரவிச்சந்திரன்... விரைவில் டும்டும்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

அதைத் தொடர்ந்து, அவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா பிரபு, அவரின் அத்தை மகன் குணாலைத் திருமணம் செய்து, மணமுறிவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com