சென்னை திரும்பினார் அஜித் குமார்!

அஜித் குமார்
அஜித் குமார்
Published on

நடிகர் அஜித்குமார் துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார்.

துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு, சில போட்டிகளில் கலந்துகொண்டார்.

பயிற்சிகளின்போது அன்றாடம் அவரைச் சந்திக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்ததுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, , ஈரான் ராணுவம் துபையிலுள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்களைத் தாக்கி போர் பதற்றத்தை ஏற்படுத்தியதும் அஜித்குமார் பத்திரமான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அஜித்தைக் கண்டவர்கள் விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com