மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

திரிஷா பற்றி அத்துமீறிப் பேச்சு- மன்சூர் அலிகான் விளக்கம்!

நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ திரைப்படத்தில் திரிஷாவை வல்லுறவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று அத்துமீறிப் பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:

“'அய்யா' பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு, பசங்க வந்த செய்திகள் அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் வெளியாகின்ற நேரத்தில், நான் வருகின்ற தேர்தலில் ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில் வேண்டும் என்றே எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில் அந்த பெண்ணை உயர்வாகத்தான் சொல்லிருப்பேன். அனுமார் சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிக் கொண்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதில் இல்ல. ஆதங்கத்தை காமெடியா சொல்லிருப்பேன். அதைக் கட் பண்ணிப் போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்கிறார்கள். அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்று ஆகிவிட்டார்கள் பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்களை கட்டிக்கொண்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களுடைய பெரிய ரசிகை என்று சொன்னேன். இன்னும் இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும். 360 படங்களில் நடித்துவிட்டேன். நான் எப்போதும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதைக் குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியாது. உலகத்தில் எத்தனையோ பிரச்னை இருக்கிறது... பிழைப்ப பாருங்கப்பா...”என்று தன்பேச்சை நியாயப்படுத்தியவாறும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com