சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் டைட்டில் டீஸர் வெளியீடு!

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் டைட்டில் டீஸர் வெளியீடு!
Published on

சிவகார்த்திகேயன் நடிக்கும் 21ஆவது படத்துக்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றதோடு, ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21ஆவது படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் டீஸரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் என்ற பாத்திரத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com