‘ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை மாதிரி’ – மோகினி டே விளக்கம்!

மோகினி டே
மோகினி டே
Published on

“ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை மாதிரி. அவருடன் என்னைத் தொடர்புப்படுத்திப் பேசுவது வருத்தம் அளிக்கிறது.” என கிட்டாரிஸ்ட் மோகினி டே தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுடனான 29 ஆண்டுக்கால திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து இவர்களின் விவாகரத்து தொடர்பாக வதந்திகள் பரவத்தொடங்கின.

ஏ.ஆர். ரஹ்மானிடம் கிட்டாரிஸ்ட் ஒருவரும் அவருடைய கணவருடனான விவாகரத்தை அறிவித்ததைத் தொடர்புப்படுத்தி விசமத்தனமான வதந்திகளைப் பரப்பினர். இதனிடையே தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து, உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ள இசை கலைஞர் மோகினி டே, தனது தந்தை போன்ற நபருடன் தன்னை தொடர்புப்படுத்திப் பேசுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரஹ்மான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என்று அதில் மோகினி டே தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com