அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம்
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம்

கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் அசோக் செல்வன்!

நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது.

தமிழில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், தெகிடி, ஓ மை கடவுளே, மன்மத லீலை, நித்தம் ஒரு வானம், போர் தொழில் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தநிலையில், இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அசோக் செல்வன் - கீர்த்தி பண்டியன் திருமணம் இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தன்னுடைய திருமணப் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அசோக் செல்வன், “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” என்ற குறுந்தொகை பாடல் வரிகளைப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com