
‘சிபி சக்கரவர்த்திக்கு வாய்ப்பளிக்காமல் தன்னைத்தானே காப்பாற்றிக்கொண்ட ரஜினிக்கு வாழ்த்துகள்’
2023ன் துவக்கத்தில் சோஷியல் மீடியாக்களில் வலம் வந்த பிரபல கமெண்ட் இது.
கொஞ்சமல்ல... ரொம்பவே குழப்பமாக இருக்கிறது அல்லவா ?
யெஸ். தற்போது, கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 173’ படத்துக்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டிருக்கும் சிபி சக்கரவர்த்தி இரு வருடங்களுக்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டவர். அப்போதைய தயாரிப்பு நிறுவனம் லைகா புரடக்ஷன்ஸ்.
ஓவர் பட்ஜெட், தலைவருக்கு தலைவணங்காமல் நடந்துகொண்டது, டெக்னீஷியன்கள், நட்சத்திரங்கள் செலக்ஷனில் ரஜினியோ தயாரிப்பு நிறுவனமோ தலையிடக்கூடாது என்று அடமன்டாக நடந்துகொண்டது போன்ற காரணங்களுக்காக சிபி அப்போது தூக்கி அடிக்கப்பட்டார்.
அடுத்து அவர் தமிழில் சில ஹீரோக்கள் தொடங்கி, தெலுங்குக்குப் போய் நானியை வைத்து இயக்குவதாக இருந்த அத்தனையும் அம்பேல். இறுதியாக தனது முதல் பட ‘டான்’ நாயகன் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கத் தயாராக இருந்த நிலையில்தான் திரும்பவும் ரஜினியில் வந்து சேர்ந்திருக்கிறார்.
அப்போது தூக்கி அடித்த ரஜினி இப்போது சம்மதிக்கக் காரணம் கமல். சிபியின் கதையை சி.கா மூலம் கேட்ட கமல் ‘இது சர்வ நிச்சயமா ஹிட். யோசிக்காம ஒத்துக்கங்க’ என்று அழுத்தம் கொடுக்கவே வேறு வழியின்றி சம்மதித்திருக்கிறார் ரஜினி.
லைகாவில் தயாரிப்பதாக அதே ரஜினி கதையைத்தான் சிபி இப்போதும் இயக்கவிருக்கிறார் என்பது போனஸ் தகவல்.