நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடிகை அஞ்சலி
நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடிகை அஞ்சலி

மேடையிலேயே தள்ளி விட்ட பாலகிருஷ்ணா: பதில் அளித்த அஞ்சலி!

Published on

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தள்ளிவிட்டது அஞ்சலி பதிலளித்துள்ளார்.

‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்த பாலகிருஷ்ணா, மேடை ஏறியதும் நடிகை அஞ்சலியைத் தள்ளி நிற்கச் சொன்னார். அஞ்சலியும் நகர்ந்தார். ஆனால், திடீரென இன்னும் முன்னால் என அஞ்சலியைத் தள்ளிவிட்டார். ஒருகணம் தடுமாறிய அஞ்சலி, இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி சர்ச்சையானது.

இந்நிலையில் நடிகை அஞ்சலி இது குறித்து பதிலளித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில், “கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் முன் வெளியீட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்த பாலகிருஷ்ணாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலகிருஷ்ணாவுக்கும் எனக்கும் ஒருவருக்கொருவர் மரியாதை உண்டு. நாங்கள் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்துகொண்டது அற்புதமான நிகழ்வு” எனக் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com