
பிக்பாஸ் தமிழின் ஒன்பதாவது சீசனில் டபுள் எவிக்ஷன் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, விஜே பார்வதி மீது பிரஜின் வைத்திருக்கும் குற்றச்சாட்டும் பேசுபொருளாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்திருக்கிறது. பிக்பாஸ் ஸ்கிரிப்ட்படி கடந்த வாரம் ஆதிரை, இந்த வாரம் ரம்யா ஜோ என ஃபைனல் வரை யார் முன்னேறுவார்கள் என ஒரு பட்டியல் இணையத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்தப் பட்டியல்படியே கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்படுவார். பிக்பாஸே ஸ்கிரிப்டட் ஷோதான் என்ற பேச்சு மீண்டும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. இதை முறியடிக்கும் விதமாகதான் ரம்யா ஜோவை தக்க வைத்து அவருக்கு பதிலாக டபுள் எவிக்ஷனை கையில் எடுத்திருக்கிறது பிக்பாஸ் அணி.
அந்த வகையில், போட்டியில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தவரான துஷார் மற்றும் பிரவீன் இருவரும் இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். முதல் வாரத்தில் இருந்தே துஷார் ஆட்டத்திற்கு பெரிதாக சுவாரஸ்யம் சேர்க்காமல் சக போட்டியாளரான அரோராவிடம் பழகுவதையே முழுநேர வேலையாக வைத்திருந்தார். இதுகுறித்து அரோரா- துஷார் இருவருக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சகபோட்டியாளர்களும் விஜய்சேதுபதியும் சுட்டிக் காட்டியுமே இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், துஷாரின் வெளியேற்றம் சரியே! ஆனால், பிக்பாஸ் போட்டிகளில் முழு ஈடுபாடு காட்டி வந்த பிரவீனின் வெளியேற்றம் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.
அதேபோல, தன் தோள்மீது கைவைத்து பேச முற்பட்ட பார்வதியின் கைகளை பிரஜின் தட்டி விட்டிருக்கிறார். அண்ணன் என்ற நினைப்பில் யதார்த்தமாக தான் அப்படி நடந்துகொண்டதாகவும் ஆனால், பிரஜின் தன் கைகளைத் தட்டி விட்டது மனம் புண்படியாக இருந்ததாகவும் சபையில் எல்லோர் முன்னிலையிலும் நேற்றைய எபிசோடில் பார்வதி சொன்னார். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக பிரஜின் ‘நோ மீன்ஸ் நோ’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி எனக்கு இதுபோன்ற தங்கையோ அக்காவோ தேவையில்லை என்று சொன்னார்.
தான் யாதார்த்தமாக நடந்து கொண்டதாக சொல்லும் இதே பார்வதிதான் முன்பு பிரவீன் வீட்டு தலயாக இருந்தபோது அவர் தன்னை தொட்டு பேசியதற்காக அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தினார். இதுமட்டுமல்லாது, கம்ருதீனிடமும் அத்துமீறி அடல்ட் கண்டண்ட் பேசிவிட்டு பின்பு அவர் மீதே குற்றம் சொல்லி திவாகரிடம் பேசிக்கொண்டிருந்ததும் இதே பார்வதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை வார இறுதி எபிசோடில் தொகுப்பாளர் விஜய்சேதுபதி கவனித்து பேசுவாரா என்பதைப் பார்க்கலாம்.