
புரட்சி இயக்குநர், நடிகர் விஜய்யின் தந்தை என்கிற அந்தஸ்துகளைத் தாண்டி தமிழக முதல்வரின் தந்தை என்கிற புரமோஷனையும் பெற்றிருக்கிறார் எஸ்.ஏ.சி. சும்மா வரவில்லை இந்த வளர்ச்சி. ஒரு இயக்குநராக அவரது அர்ப்பணிக்கு அருகே ஒருவரும் நிற்க முடியாது என்கிறார் எஸ்.ஏ.சியின் இணை இயக்குநர் ரமேஷ் ரங்கசாமி.
எஸ்.ஏ.சி குறித்த அவரது பதிவு இதோ…
2008 ம் வருடத்தின் இறுதியில்
புரட்சி இயக்குனர் S A Chandrasekaran சாரிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தேன்
படிப்படியாக அவரிடம் தொழில் கற்று
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து
இணை இயக்குனராகி
இன்று வரை கிட்டத்தட்ட
இந்த 17 வருடமாக சாரோடு
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவோ நிகழ்வுகள் அருகில் இருந்து சாரை பார்த்திருக்கிறேன்
சமீபத்தில் வெளியான
#கூரன் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்தபோது
ஒரு நாள் சாருக்கு
உடல் நிலை சரியில்லாமல் போக
போனில் டாக்டர் "ரெஸ்ட் எடுங்க இப்போது படப்பிடிப்பு நடத்த வேண்டாம் தள்ளி வையுங்கள்" என்று சொல்லுகிறார்
"சினிமா தான் எனது உயிர்மூச்சு வேலை செய்கின்றபோதே உயிர் பிரிவது பாக்கியம் அப்படி ஒரு வேளை போனால் படப்பிடிப்பு தளத்திலேயே போகட்டும்" என்று சொல்லிவிட்டு கொடைக்கானலின்
கடும் குளிரில் தொடர்ந்து சூட்டிங்கை
நடத்தி கொண்டு இருந்தார்
கொடைக்கானல் லாட்ஜில்
தங்கி இருக்கும் சாரை
அருகில் தங்கி இருக்கும் நான்தான்
தினமும் அதிகாலையில் எழுந்து போய்
சாரின் ரூம்கதவை தட்டி
சாரை எழுப்புவேன்
கதவை தட்டியதுமே ரூம் உள் இருந்து
"எழுந்துட்டேன் குட் மார்னிங் ரமேஷ்" என்று
சாரின் குரல் வெளியே கேட்கும்
அதன் பிறகு சார், ரூமில் தியானம் பண்ணி விட்டு குளித்து முடித்து துள்ளலாக ஓடிவந்து
கார் ஏறுவார்
பிறகு அன்று முழுவதும் பம்பரம் போல் சுழன்று ஒரு இளைஞன் போல
படப்பிடிப்பை நடத்தி முடிப்பார்
ஒரு நாள் இரவு சாருக்கு
உடம்புக்கு ரொம்பவும் முடியவில்லை
சாரின் நிலை கண்டு பயந்து விட்டேன்
சார் போனில் மீண்டும் டாக்டரிடம் பேசுகிறார்
டாக்டர் "நான் சொன்னா கேட்க மாட்டீங்களா
படப்பிடிப்பை கேன்சல் பண்ணி விட்டு
உடனே சென்னை கிளம்பி வாங்க" என்கிறார்
இன்னும் மீதம் நான்கு நாட்கள் தானே
எப்படியாவது மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டே போலாம் என்ற
நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவரிடம்
இரவு விடை பெறும்போது
"நாளை காலை படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை
சரி போய் படுங்க பாத்துக்கலாம்" என்று
என்னிடம் சார் சொல்லிவிட்டு படுக்கப்போனார்
இரவு எனது ரூமில்
சாரின் நிலை கண்டு யோசித்து கொண்டே இருந்த நான் புரண்டு புரண்டு படுத்தும் வெகுநேரம் தூக்கம் வராமல் இருக்க ஒரு கட்டத்தில் எப்படியோ என்னையும் அறியாமல் தூங்கி விட்டேன்
திடீரென்று அடித்த
போனின் அலாரம் சத்தம் கேட்டு எழுந்து
பயங்கரமானகுளிரில் நடுங்கியபடியே
மாடிப்படியில் இறங்கி
வழக்கம் போல சாரின் ரூம் கதவின்
காலிங் பெல்லை அழுத்தினேன்
சாரிடமிருந்து பதில் வரவில்லை
கொஞ்சம் பயத்துடன் பதட்டத்துடன்
கதவை தட்டினேன்
கொஞ்சநேரம் கழித்து
சார் கதவை திறந்து
"என்ன ஆள் போயிட்டான்னு பயந்துட்டீயா"
என்று சிரித்தவாறு கேட்டார்
நான் சாரோட காலில் விழுந்து
"வாழ்க வளமுடன்
எல்லா செல்வங்களையும் பெற்று நீடுழி
சுகமே சூழ்க
என்னேரமும் என்னாளும்
உங்களுக்கு
உங்களால் எங்களுக்கு"
என்றேன்
"இன்னொரு தடவை சொல்லு" என்று கேட்டு
"நல்லாருக்குபா இந்த வாழ்த்து இதை நானும்follow பண்றேன் இப்படி சொல்ல"
என்றார்
"சார் உங்களுக்கு ஒன்னும் ஆகாது
நீங்க நல்லா இருப்பீங்க
100 வருசம் நோய் நொடியின்றி
இதே போல் ஆரோக்கியமாக இருப்பீங்க" என்றேன்
அதன் பிறகு நான்கு நாட்களும் முன்னைக்காட்டிலும்
அதிவேகமாக உற்சாகமாக
படப்பிடிப்பு வேலையில் மூழ்கினோம்
எத்தனையோ சவால்களில் இருந்து
#டேக்_இட்_ஈஸி ஆக
வெளியே வரும்
எங்கள் இயக்குனரின் #கனவு
இன்று நனவாகி இருக்கிறது
#புரட்சி_இயக்குனராக இருந்தவர்
இன்று #CM_மின்_தந்தையாக
எனது குருநாதரின்
மனமகிழ்ச்சியை பார்த்து
மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள்
#தளபதி_விஜய் சார்
#CMவிஜய் சார்