ரோகிணி தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
ரோகிணி தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

சென்னை: முக்கிய தியேட்டர்களில் லியோ வெளியாவதில் சிக்கல்!

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் லியோ திரைப்படம் வெளியாகவில்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் டிக்கெட் புக்கிங் இல்ல என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், ”லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை” என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை
ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

நேற்று மாலை ரோகிணி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த லியோ பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில், படம் வெளியாகவில்லை என்ற அறிவிப்பு இன்று காலை வெளியாகியுள்ளது.

அதேபோல், சென்னை குரோம்பேட்டையில் வெற்றி தியேட்டரில் லியோ பட புக்கிங் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களுடன் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால், இன்னும் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com