சீமானிடமிருந்து விஜய்க்கு யுடர்ன் அடித்த சேரன் !

சீமானிடமிருந்து விஜய்க்கு யுடர்ன் அடித்த சேரன் !
Published on

தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரக் கூட்டங்களில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து, நாதக சீமான் 234 தொகுதிகளிலும் வெல்வார் என்று முழங்கி வந்த இயக்குநர் சேரன் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் திடீர் விஜய் ஆதரவாளராக மாறினார்.

சென்னை பிரசாத் லேப்பில் திங்களன்று மாலை, தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா நடந்தது. அந்நிகழ்வில் திரைத்துறையின் அத்தனை சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு முதல்வர் விஜய்யை மனம் குளிர பாராட்டினார்.

அதே நிகழ்வில் பேச இயக்குநர் சேரன் மைக்கைப் பிடித்தபோது விஜய் குறித்து ஏதாவது ஏடாகூடமாகப் பேசிவிடுவாரோ என்கிற கலகத்தில் இருக்க, மற்றவர்களுக்கு இணையாக முதல்வர் விஜயைப் பாராட்டிப் பேசிய அவர் , உச்சபட்சமாக விஜய் வந்த பிறகு தமிழ் சினிமாவுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால் திரைத்துறையின் அத்தனை சிரமங்களையும் நேராக இருந்து பார்த்தவர் விஜய்.

திரைத்துறையின் பிரச்சினைகளை சரி செய்ய முதல்வர் விஜய் ஒரு குழு அமைக்க வேண்டும். அக்குழுவுடன் பேச முதல் ஆளாக முதல்வர் விஜய் என்னை அழைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றும் வேண்டுகோள் வைத்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com