ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்

முதல்வர் நிதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய ஹரிஷ் கல்யாண்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளார்.

2018இல் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்துப் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு, பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘எல்.ஜி.எம்.’திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்த படம் 'பார்க்கிங்'. நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை ஹரிஷ் கல்யாண் வழங்கியுள்ளார். அதேபோல், பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார், அப்படத்தின் தயாரிப்பாளர் சினீஷ் ஆகியோர் தலா ஒரு லட்சம் வழங்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக, சூர்யா, கார்த்தி இணைந்து ரூ. 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com