அமீருக்கு சேரனும் ஆதரவு - விடாது பருத்தி வீரன்!

அமீருக்கு சேரனும் ஆதரவு - விடாது பருத்தி வீரன்!

பருத்திவீரன் விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக இயக்குநரும் நடிகருமான சேரனும் கருத்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், 

"அமீர் மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே... திமிராய் இரு... நீயின்றி அவர்கள் இல்லை என்ற கர்வம் மட்டும் போதும்... உண்மையும் சத்தியமும் வெல்லும்.. காலம் எல்லா கலங்கத்தையும் துடைக்கும்.” என்றும்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை இணைத்து, ”படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும் உண்மையும் நாணயமும் நான் நன்கு அறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன். உங்களை கார்த்தியும் சூர்யாவும் இந்நேரம் உம் தவறைக் கண்டித்திருக்க வேண்டும்.” என்றும் சேரன் குறிப்பிட்டுள்ளார் 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com