10 பாகங்களாக உருவாகும் மகாபாரதம்: ராஜமௌலி அறிவிப்பு!

10 பாகங்களாக உருவாகும் மகாபாரதம்: ராஜமௌலி அறிவிப்பு!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இறுதியாக வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி அடைந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றது.

இந்த நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் புதிய திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜமௌலி மற்றும் மகேஷ்பாபு இணையும் புதிய திரைப்படம் 3 பாகங்களாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்து கடவுளான அனுமானின் கதையை தழுவி எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ராஜமௌலி. அதில் பேசிய அவர் மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்கும் நிலை எனக்கு உருவானால், நாட்டில் உள்ள மகாபாரதத்தின் ஒவ்வொரு பதிப்பையும் நான் படிப்பேன். அதற்குக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். மொத்தத்தில் 10 பாகங்கள் கொண்ட படமாக நான் எடுக்கப்போகும் மகாபாரதம் இருக்கும் என்பதை மட்டும் இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com