15 டிகிரி குளிரில் தண்ணீருக்குள் மூச்சை அடக்கி நடித்தேன் - ஆர்யா பெருமிதம்

ஆர்யா
ஆர்யா
Published on

ஆர்யாவின் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இம்மாதம் 19ஆம் தேதி வெளிவருகிறது அல்லவா? இதற்கான முன்னோட்ட வெளியீடுகள் வரத் தொடங்கியுள்ளன. 

இப்படத்தின் காட்சி ஒன்றை வெளியிட்டு, ’அதில் எப்படி நடித்தேன்’ என விவரித்து நடிகர் ஆர்யா சமூக ஊடகப் பக்கத்தில் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். 

இந்தப் படத்தில் கடலுக்கு அடியில் நடைபெறுவதாக உள்ள சண்டைக்காட்சி, மும்பையில் படமாக்கப்பட்டது. வழக்கமாக, ஆறு அடி ஆழத்தில் இப்படியான காட்சிகளை எடுத்துவிடுவார்கள் என்றும் ஆனால் இந்தப் படத்துக்காக இருபது அடி ஆழம் உள்ள டைவிங் நீச்சல் குளத்தில் படம்பிடிக்கப்பட்டது என்றும் நீருக்கடியில் சென்றால் ஒன்றரை மணி நேரம்வரை அங்கேயே இருந்து படப்பிடிப்பை நடத்தும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் சுமார் 15 டிகிரி செல்சியஸ் குளிரில் இயல்பாகவே உடல் நடுங்கும் என்றாலும், தான் 40 வினாடிகள்வரை மூச்சை அடக்கி சண்டைக் காட்சியில் நடித்ததாகவும் ஆர்யா தெரிவித்துள்ளார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com