தடபுடலாக நடந்த திருமண ஏற்பாட்டை நிறுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்…கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்
Published on

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது திருமணத்தை நிறுத்திவிட்டாரா என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

’ஒருநாள் கூத்து’, ‘சங்கத்தமிழன்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். நடிகையாக மட்டுமல்லாது கார் ரேஸர், விலங்கு நல ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவராக வலம் வருகிறார் நிவேதா பெத்துராஜ். தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் வலம் வந்தவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது திருமண நிச்சயதார்த்ததை அறிவித்தார்.

தனது காதலர் ரஜித் இப்ரானுடன் காதலில் கசிந்துருகும் புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டார். நிவேதா பெத்துராஜின் நீண்ட நாள் நண்பரான ரஜித் இப்ரான் பிரபல தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஜோடியின் திருமணம் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்த நிலையில் திடீரென திருமண ஏற்பாட்டை நிறுத்தியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். சமூகவலைதள பக்கங்களில் இருந்து தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

இதுமட்டுமல்லாது, ‘இன்றைய உலகில் மனிதர்கள் மத்தியில் அன்பும் காதலும் கேள்விக்குறியாக உள்ளது’ என்று காதல் தோல்வியில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டு வருகிறார். தனிமை, புதிய தொடக்கம் என்றும் கருத்துகளை சொல்லி வருபவர், திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்றும் தனது காதல் பிரேக்கப் குறித்தும் மெளனம் கலைப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்த சோகத்தில் இருந்து நிவேதா பெத்துராஜ் விரைவில் மீண்டு வரவேண்டும் எனவும் இணையத்தில் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் புகழ் ஜூலியின் முன்னாள் காதலர்தான் இந்த ரஜித் இப்ரான் என்றும் சில தகவல்கள் உலவி வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட்டர் ஸ்மிருதி மந்தனாவும் திருமணத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, சமீபகாலமாக பிரபலங்கள் தங்கள் திருமணத்தை அறிவிப்பதும் பின்பு பிரேக் செய்வதுமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com