சினிமா செய்திகள்
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் திரைப்படம் ‘D50’. இந்தப் படத்தில், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த பட்டியலில் அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளார்.
அனிகா சுரேந்திரன் தனது ஆறு வயதில் நடிக்க தொடங்கினார். கேரளாவில் பிறந்த அனிகா 2010ஆம் ஆண்டு ‘கத துடருன்னு’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
இந்த நிலையில், D50 படத்தில் தனுஷூக்கு ஜோடியாக அனிகா இணைந்திருக்கிறார். படத்தில் துஷாரா விஜயன் அவருக்கு சகோதரியாக நடிக்கிறார். இந்த படமானது வடசென்னையில் இருக்கும் அண்ணன் தம்பியை பற்றிய கதை என கூறப்படுகிறது.