அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; பிரதமர், தென்மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!

Anirudh - kaviya maaran marriage
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்
Published on: 

இசையமைப்பாளர் அனிருத், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனின் திருமணம் வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கும் ஐதாராபாத் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பாளருமான காவியா மாறனுக்கும் வரும் நவம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் திருமணத்தை கிரீஸ் நாட்டில் நடத்த இரண்டு குடும்பங்களும் முடிவுசெய்துள்ளன. இந்தத் திருமணத்தில் முன்னணி பிரபலங்கள், இரு குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதற்காக 4 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள திருமணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிப்படுகிறது.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், காவிரி தம்பதியர் திருமண வரவேற்பிதழை வழங்கி வருகின்றனர்.

தென்மாநில முதல்வர்களுக்கு திருமண வரவேற்பிதழ் வழங்கப்பட்டது.
தென்மாநில முதல்வர்களுக்கு திருமண வரவேற்பிதழ் வழங்கப்பட்டது.

தென்மாநில முதல்வர்கள் தமிழக விஜய், ஆந்திர சந்திரபாபு, தெலுங்கானா ரேவந்த் ரெட்டி, கர்நாடக டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு அழைப்பு
பிரதமர் மோடிக்கு அழைப்பு

இதேபோல, பிரதமர் மோடிக்கும் இரு குடும்பத்தாரும் இணைந்து அழைப்பு விடுத்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com