‘அற்புதமான மனிதர்… ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீங்க...’ – ஆடியோ வெளியிட்ட சாய்ரா!

Saira Banu - AR Rahman
சாய்ரா பானு - ஏ.ஆர். ரஹ்மான்
Published on

‘தயவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர்' என்று ஏ.ஆர். ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானு உருக்கமாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி இடையிலான 29 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்த நிலையில், விவாக ரத்து அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பல விதமான கருத்துக்கள், விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சாய்ரா பானு ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சாய்ரா பானு பேசுகிறேன். நான் இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். யூடியூபர் மற்றும் தமிழ் மீடியா தயவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர். இந்த உலகில் மிகவும் நல்ல மனிதர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை.

மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். பிசியான காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் இருக்கிறார். அவரையோ, என் குழந்தைகளையோ தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. விவாகரத்து குறித்து பொய்யான தகவலை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். விரைவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்புவேன். நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com