வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியின் 'அரசன்' ரிலீஸ் எப்போது ?

Arasan film
'அரசன்' திரைப்படம்
Published on: 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துவரும் 'அரசன்' திரைப்படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

நடிகர் சிம்பு இன்று அதிகாலையில் வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, இந்த மகிழ்ச்சியான அப்டேட்டை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்த வீடியோவில், படப்பிடிப்புத் தளத்தின் சில காட்சிகள், படக்குழுவினரின் உற்சாக தருணங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை அந்த வீடியோ பெற்றுள்ளது.

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால், 'அரசன்' திரைப்படத்தின் மீது ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சிம்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி, #Arasan, #STR தொடர்பான ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com