பிக்பாஸ் தமிழ் 9: வெளியேற்றப்பட்ட வாட்டர்மெலன் ஸ்டார்!

பிக்பாஸ் தமிழ் 9: வெளியேற்றப்பட்ட வாட்டர்மெலன் ஸ்டார்!
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சனில் சர்ச்சைக்குரிய ‘வாட்டர்மெலன்’ ஸ்டார்’ திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக புரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் 9 சீசனில் முதல் போட்டியாளராக அழைக்கப்பட்டவர் திவாகர். சமூக ஊடகங்களில் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என கிண்டலுக்குள்ளானவர் திவாகர்.

ஆனால் இந்த கிண்டலே தமது பலம் என திவாகர் நம்பினார்; அதனாலேயே அவரை பிக்பாஸும் களமிறக்கியது.

பிக்பாஸ் வீட்டில் எந்தவித சமூக பிரக்ஞையும் இல்லாமல் ஜாதிய -ஆணாதிக்க வெறித்தனத்தை வெளிப்படையாக கொட்டி ஏகப்பட்ட வெறுப்பை வாங்கிக் கட்டியவர் திவாகர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதியும் ஒவ்வொரு வாரமும் திவாகரை மிக மோசமாகவே விமர்சித்தும் பார்த்தார். ஆனாலும் அவரது எரிச்சலூட்டும் ஆட்டம் ஓயவில்லை. அதுவும் விஜய் சேதுபதி நேற்று பேசுகையில், “உங்களுக்கு மூளை எல்லாம் இல்லையா?” என ரொம்பவே கோபப்பட்டார்.

இந்த பின்னணியில் இன்றைய எவிக்சனில் திவாகர் வெளியேற்றப்படுவதாக புரோமா வெளியாகி உள்ளது. திவாகர் வெளியேற்றப்படுவதை விஜய் சேதுபதி சொன்ன போது அரங்கம் அதிர கைதட்டல் எழுந்ததே திவாகர் குறித்த மக்களின் மதிப்பாகவும் இருந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com