அம்மாடியோவ்... ரூ.10,000 கோடி வசூலை நெருங்கும் பயோபிக் படம்!

Michael
மைக்கேல்
Published on

உலகிலேயே அதிக வசூல் செய்த முதல் பயோபிக் திரைப்படம் என்ற சாதனையை 'மைக்கேல்' திரைப்படம் படைத்துள்ளது.

இது மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படம் ஆகும். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சனாக அவரின் உறவினரான ஜாபர் ஜாக்சன் நடித்திருக்கிறார்.

அன்பொய்ன் ஃபகா இயக்கிய இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், படம் வெளியானதும் பயோபிக் படங்களிலேயே சுமாரானது இதுதான் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதனால், 'மைக்கேல்' படம் வசூலில் கோட்டை விட்டுவிடும் என்று பார்த்தால், கோடியில் அள்ளி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் படம் வெளியான சில நாள்களிலேயே ரூ. 3000 கோடி வசூலைக் கடந்தது.

உலக அளவில் இந்தப் படம் ரூ. 9600 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com