ரஜினியின் வேட்டையன் படத்துக்கு யுஏ சான்று- நீட், ஒன்றிய வார்த்தைகளுக்கு தடை!

censor certificate for vettaiyan film
வேட்டையன் படத்துக்கு தணிக்கைச் சான்று
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் லைக்காவின் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாவது தெரிந்ததே! அந்தப் படத்துக்கான தணிக்கை முடிந்து இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது. 

அதன்படி, படத்தின் நேரம் எங்கும் குறைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சில இடங்களில் வார்த்தைகளை மௌனமாக்கும்படியும் மாற்றியமைக்கும்படியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

”எல்லாம் மன்னராட்சி எனத் தொடங்கி முதன்முதலா சொல்லுச்சு” என முடியும்வரை மாற்றியமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, ஒன்றிய, பாஸ்டர்ட், ஏழைகள் கூலித்தொழிலாளி ஆகிய வார்த்தைகளை மௌனமாக்கவோ நீக்கவோ செய்யக் கூறப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சர்தார்ஜி என்கிற வார்த்தையை மௌனமாக்கவும் நீட் டாக்டர் என்பதை மாற்றியமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com