பன்னீருக்குப் பதில் சிக்கன் - ஸ்விக்கி நிறுவனம் மீது பாய்ந்த நடிகை!

நடிகை சாக்‌ஷி அகர்வால்
நடிகை சாக்‌ஷி அகர்வால்
Published on

நடிகை சாக்‌ஷி அகர்வால் தனக்கு அசைவ உணவை வழங்கிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாகப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். திரைப்படங்களில் குறைவாக நடித்தாலும் விளம்பரங்கள் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவருக்கான ரசிகர்களும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”முழு வெஜிடேரியன் (சைவம்) ஆர்டர் செய்த உணவில் சிக்கன் கிடைத்தது. இப்போதுதான் உணவைத் தூக்கியெறிந்தேன். இதற்கு ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்ல வேண்டும். என் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தியதற்கு நன்றி” எனத் ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் சாக்‌ஷி அகர்வாலின் உணவில் சிக்கன் துண்டுகள் இருந்ததற்கு சம்பந்தப்பட்ட உணவகத்துடன் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் எச்ஆர்எக்ஸ் (HRX) என்கிற ஃபிட்னஸ் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு வருவதால், ஹிருத்திக் ரோஷனையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சாக்‌ஷி.

logo
Andhimazhai
www.andhimazhai.com