
சிவகார்த்திகேயனின் பராசக்தி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இதில், வில்லனாக நடிகர் ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், உலகளவில் பராசக்தி முதல் நாள் வசூலாக ரூ. 13.25 கோடியை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் ரூ. 12.35 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனால், முதல் நாள் வசூலாக அமரன் ரூ. 35 கோடி, மதராஸி ரூ. 25 கோடி ஆகிய திரைப்படங்களின் வசூலை பராசக்தி நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.