நாட்டுல... தமிழ்நாட்டுல- வாட்சாப் ஸ்டேட்டஸை மாற்றிய அமீர்!

நாட்டுல... தமிழ்நாட்டுல- வாட்சாப் ஸ்டேட்டஸை மாற்றிய அமீர்!
Published on

ஜனநாயகன் படத்தை வெளியிட விடாமல் சதி நடப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாக இதுகுறித்து தங்களின் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இதில், திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீரின் கருத்தும் முக்கிய கவனம் பெற்றது. 

முதலில் அவர் தன்னுடைய வாட்சாப் நிலைத்தகவலாக, ”ஒரு சினிமாவை ரிலீஸ் பண்ணவிடாம தடுத்திட்டா அவங்கள வழிக்குக் கொண்டுவரலாம்கிற உங்க நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது! இந்த நாட்டுல அதிகாரத்தை யார் கையில குடுக்கணும்கிறத மக்கள்தான் முடிவு பண்றாங்க, அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல.” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து பலரும் குறிப்பிட்ட நிலையில், தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்ட அமீர், நாட்டுல என்கிற சொல்லை மட்டும் மாற்றிவிட்டு, அந்த இடத்தில், தமிழ்நாட்டில் என்பதைச் சேர்த்து வாட்சாப் நிலைத்தகவலை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். 

அவரின் இந்த மாற்றம் சினிமா, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com