இயக்குநர் சூரியபிரகாஷ்
இயக்குநர் சூரியபிரகாஷ்

இயக்குநர் சூரியபிரகாஷ் மறைவு!

மாணிக்கம், மாயி, திவான், அதிபர் உட்பட்ட படங்களை இயக்கிய சூரியபிரகாஷ் சென்னையில் இன்று காலமானார். மாரடைப்பால் உயிரிழந்த அவரின் உடல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது.

ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடித்த மாணிக்கம் திரைப்படத்தின் மூலம் 1996இல் இயக்குநராக அறிமுகமானார் சூரியபிரகாஷ்.

மீனாவுடன் இணைந்து சரத்குமார் நடித்த மாயி படம், சரத்குமாரின் அடுத்த படமான திவான் ஆகியவற்றையும் சூரியபிரகாஷ் இயக்கினார்.

ஜீவன் நடித்த அதிபர் படம் அவரின் இயக்கத்தில் வெளியானது.

புதுமுகங்கள் நடித்த வருஷநாடு படமும், பெண் ஒன்று கண்டேன் படமும் சூரியபிரகாஷ் இயக்கிய மற்ற படங்கள்.

டாக்டர் ராஜசேகர் நடித்த பரத சிம்ம ரெட்டி எனும் தெலுங்குப் படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

சூரியபிரகாஷ் இயக்கிய வருஷநாடு படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று அவர் காலமானார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் அடக்கம்செய்யப்படுவதற்காக அவரின் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com