த்ரிஷா ஜோடியாக சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தைப் பார்வையிட வந்த வாய்ப்பை முதல்வர் விஜய் நிராகரித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மேல் இருந்த குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது தூய்மைப் பணியாளர்கள் பட்டினிப் போராட்டம் நடத்திய வேளைகளில் கூட அவர் ஜாலியாக ‘கூலி’ படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது.
விஜய்யின் கடைசிப்படமான ;ஜனநாயகன்’ ரிலீஸ் குறித்து எவ்வித அப்டேட்களும் இல்லாத நிலையில் வரும் 12 வியாழனன்று சூர்யாவின் ‘கருப்பு’ படம் ரிலீஸாகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்.
முதல்வர் ஆன கையோடு இப்படத்தை விஜய் பார்த்தால் அது ஒரு நல்ல விளம்பரமாக அமைந்து ஓபனிங்கும் சிறப்பாக இருக்கும் என நினைத்த படக்குழு இப்படத்தை எப்படியாவது விஜய்யை பார்க்கவைத்துவிடவேண்டும் என்று முடிவு செய்து நாயகி த்ரிஷாவை அப்ரோச் செய்திருக்கின்றனர். அதற்கு அவரோ, ‘நான் இந்த கோரிக்கையோடு அவரை அணுக முடியாது. வீண் சர்ச்சைகள் கிளம்பும். உங்களுக்கு ஓ.கே. என்றால் அவரது இல்லத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் படத்தை பார்க்க வைக்கிறேன். ஆனால் முதல்வர் ‘கருப்பு’ படத்தைப் பார்த்ததாக விளம்பரங்கள் செய்யக்கூடாது. அது தொடர்பான செய்திகள் சோஷியல் மீடியாக்களில் கூட வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று நிபந்தனைகள் விதித்திருக்கிறாராம்.
ஆக பார்க்கமாட்டாரு… ஆனாலும் பார்த்துருவாரு.