மீரா கதிரவன் இயக்கத்தில் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஹபீபி’. ஜூன் 12, கடந்த வெள்ளியன்று ரிலீஸான இப்படத்தை திரையுலக பிரபலங்களும் விமர்சகர்களும் உச்சி முகர்ந்து பாராட்டிய நிலையிலும் படத்தின் வசூல் மட்டும் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.
இந்நிலையில், ரிலீஸ் தினத்திலிருந்து படக்குழுவினர் தனுஷிடம் வாழ்த்துச் செய்தி பெற எவ்வளவோ முயன்ற நிலையில் , இப்படத்துக்கு ஒருவாரம் தாமதமாக, அதாவது படம் பல தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில்,…
தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்பதிவின் பின்னூட்டங்களில் இந்த வாழ்த்தை ஒரு வாரம் முன்னதாகப் போட்டிருந்தால் உன் ரசிகர்களில் கொஞ்சம் பேராவது படத்தைப் பார்த்து வசூலைக் கூட்டியிருப்பார்கள். உன் அப்பா பாசம் இவ்வளவுதானாப்பா ? என்று தனுஷைக் கலாய்த்து வருகிறார்கள்.