சினிமா செய்திகள்
விக்ரமின் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வரும் ஜுன் 15ஆம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 2018இல் இப்படம் வெளியாக இருந்த நிலையில், நிதிச் சிக்கல் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.
பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வருவதில் தடங்கல் நீடித்தது.
இதனால் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் படங்களுக்கு தொடர் சிக்கல்கள் உருவாகின.
சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதில் செந்தில் இராமமூர்த்தி அளித்த இன்றைய தீர்ப்பின் மூலம் அந்தச் சிக்கல் தற்காலிகமாகத் தீர்ந்துள்ளது.
அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிடாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாடவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.