விஜய்யின் 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Jananayagan
ஜனநாயகன்
Published on

முதலமைச்சர் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி படம் அப்போது ரிலீஸ் ஆகவில்லை.

'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துவந்த நிலையில், அண்மையில் இணையத்தில் படம் கசிந்து சர்ச்சைக்கு உள்ளானது.

இந்தப் படத்திற்கு தற்போது தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

தணக்கை வாரியத்தின் சான்றிதழ் பெற்றதை உறுதிப்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது.

மேலும், 'விரைவில் திரையரங்குகளில் பார்க்கலாம் நண்பா, நண்பீஸ்' என்று சமூக ஊடகங்களில் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு தடைகளைத் தாண்டி ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com