ஜவான் திரைப்படம்
ஜவான் திரைப்படம்

“இவரை தடுக்க யாருமில்லை... அல்லது இருக்கிறார்களா?” - விஜய் சேதுபதி குறித்து ஷாருக் ட்வீட்!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தின் நடத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் -7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளது. தமிழின் நட்சத்திர நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவரை தடுக்க யாருமில்லை... அல்லது இருக்கிறார்களா? பாருங்கள்” என ட்வீட் செய்து ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com