கங்குவா படத்தின் போஸ்டர்
கங்குவா படத்தின் போஸ்டர்

ஜூலை 23ஆம் தேதி கங்குவா க்ளிம்ப்ஸ்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூலை 23ஆம் தேதி ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் கங்குவா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் தேதி அப்டேட்டாக வெளியாகியுள்ளது இந்த போஸ்டர். அதன்படி சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முக்கியமாக இந்த அறிவிப்புடன் வெளியான போஸ்டரில் சூர்யாவின் லுக் மாஸாக உள்ளது. சூர்யாவின் வலது கையில் பழங்கால டாட்டூஸ்கள் இருக்க, வாளுடன் மாஸ் காட்டுகிறார். மேலும், "The Man... The Wild... The Story.." என்ற கேப்ஷனும் கொடுத்து எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

அதேபோல், சூர்யாவின் 43வது பட அறிவிப்பும், அவரது பிறந்த நாள் அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com