சினிமா செய்திகள்
கலகக்கார பெண்ணாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, அவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே. ஜி. எஃப், காந்தாரா போன்ற ஹிட் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், முதன் முதலில் நேரடியாக தமிழில் தயாரிக்கும் படம் இதுவாகும்.