தக் லைஃப் படத்தில் குஷ்பு மகள்!

தக் லைஃப் படத்தில் குஷ்பு மகள்!
Published on

கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் இன்று வெளியானது.

படம் திரையீட்டுக்கு முன்னர் கமல் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. படத்தைத் திரையிட விடமாட்டோம் என கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதைத் தொடர்ந்து இன்று கர்நாடகத்தைத் தவிர மற்ற இடங்களில் படம் வெளியானது. அது அல்ல, சேதி!

இதில் பலரும் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏழாவதாக இடம்பெற்றிருப்பவர், அனந்திதா சுந்தர். இதில் என்ன பெரிய சிறப்பு?

அவர், நடிகை குஷ்பு- இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகள் என்பதுதான்!

இதையொட்டி, குஷ்பு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "மணிரத்னம் படத்தில் அவருடைய சீடர்களில் ஓர் ஆளாக என் மகளின் பெயர் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கையில், பெற்றவளாக மனது முழுக்கப் பெருமையாக இருக்கிறது. அவளுடைய முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிறிது காலமே அவளால் இந்தப் பட வேலையைச் செய்யமுடிந்தது. ஆனாலும் இதில் அவள் பெற்றுக்கொண்ட அறிவும், மணி சாரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களும் அவளுடைய ஆயுள் முழுவதும் நீடித்திருக்கக்கூடியது. உண்மையிலேயே அவளுக்கு இது நல்ல செழுமையான அனுபவம். அவளுடைய பெயரை விட்டுவிடாமல் இடம்பெறச் செய்ததற்கும் உங்களின் பெரிய மனதுக்கும் நன்றி சார்" என்று கடைசியாகவும் மணிரத்னத்தைக் குறிப்பிட்டும் குஷ்பு பதிவிட்டிருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com