புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஜானகி தனது 88ஆவது வயதில், வயது மூப்பு காரணமாக காலமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒடியா, பெங்காலி உட்பட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களை பாடி, மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ள இவர் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 'விதியின் விளையாட்டு' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.
தமிழில் இவர் பாடிய 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே', 'இஞ்சி இடுப்பழகா' பாடல்களுக்காக தேசிய விருது பெற்றார்.
'தென்னிந்தியாவின் இசையரசி' என்று அழைக்கப்படும் ஜானகி, நான்கு தேசிய திரைப்பட விருதுகளும் 33 பல்வேறு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு இவருக்கு 1986ஆம் ஆண்டு கலைமாமணி விருது கொடுத்து சிறப்பித்துள்ளது.
எஸ். பி. பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா, பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன், ராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையிலான திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த உலகைவிட்டு இவரின் உயிர் பிரிந்தாலும், தனது இசையின் மூலம் மக்கள் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருப்பார்.