வசூலை அள்ளிய ‘லோகா’... அனுஷ்கா, கீர்த்தி சுரேஷை பின்னுக்குத்தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்!

லோகா திரைப்படம்
லோகா திரைப்படம்
Published on

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் அசத்தி வருகிறது. எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் ஓரே வாரத்திற்குள் நடிகை ஒருவரின் படம் இவ்வளவு வசூலித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, அனுஷ்காவின் ருத்ரமாதேவி ரூ. 86 கோடியும், கீர்த்தி சுரேஷின் மகா நடிகை ரூ. 83 கோடியையும் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது கல்யாணி பிரியதர்ஷனின் லோகா ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com