வெளியானது மாமன்னன் படத்தின் இரண்டாம் பாடல்!

வெளியானது மாமன்னன் படத்தின் இரண்டாம் பாடல்!

மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ யுகபாரதியின் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் குரலில் வெளியாகியுள்ளது.

 பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா ஜூன் 1ஆம் தெதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், வடிவேலு குரலில் வெளியான ‘ராசாகண்ணு’ பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘ஜிக்கு ஜிக்கு ரயில்’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதியே இந்தப் பாடலையும் எழுதியுள்ளார். மிக எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

பாடலின் தொடக்கத்தில், ”புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன்” என மாரிசெல்வராஜ் எழுதிய கவிதையும் இடம்பெற்றுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் குரலில் ஒலிக்கும் இப்பாடலானது ‘நம்பிக்கை கொடுப்பது’ போன்று உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் குழந்தைகளுடன் நடனமாடுவது போன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 குழுக்குரலில் ஒலிக்கும், “எல்லாம் மாறும்…எல்லாம் மாறும்…உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்” அசைபோட வைக்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com