பகத் பாசில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்
பகத் பாசில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன்: பகத்பாஸில் வீடியோ குறித்து ஒரு கற்பனை உரையாடல்!

வடிவேலு: தம்பி என்ன நடக்குது பாத்தீங்களா?

உதயநிதி: நாம கஷ்டப்பட்டு நடிச்சோம், சமுக நீதியை நோக்கி ஒரு அடி வெச்ச படம் எடுத்ததும் எடுத்தோம். அதே சமயம் நம்ம கல்லாவும் நிரம்பிடுச்சுன்னு நினைச்சேன். ஆனால் இப்டி ஆயிடுச்சே..

வடிவேலு: வட போச்சே…

பகத் பாசில்: சார்… என்ன சார் ஆச்சு தமிழ்நாட்டுக்காரங்களுக்கு? ஒரு வில்லன் கேரக்டரைப் போய்க் கொண்டாடிட்டுஇருக்காங்க..

வடிவேலு: இவனுங்க கேரக்டரையே நம்மளால புரிஞ்சிகிட முடியாது தம்பி

உதயநிதி: பகத்.. உண்மையைச் சொல்லுங்க.. இவ்ளோ வீடியோவைப் பாக்கறப்ப உங்களுக்கு சந்தோசமாதானே இருக்கு?

பகத்பாசில்: அட போங்க சார்… பயமா இருக்கு. நான் பாஸ்டரா நடிச்சி கிறித்தவர்களைப் பொளந்தப்பக்கூட யாரும் இந்த போடு போடல.. தமிழ்காரங்க இவ்ளோ சாதிகளா பிரிஞ்சு இருக்காங்கன்னு நெனைக்கிறப்ப…

உ.தி: ஒரு விசயம்.. நீங்க செட்டியாரா, தேவரா, வன்னியரா, கவுண்டரா பல சாதியில் ஒரே நேரத்தில் பொறதுட்டீங்க..

பகத் பாசில்: அண்ணா.. நான் பாய்ங்கன்னா..

வடிவேலு: தமிழ்நாட்டுக்கு வந்துட்டீங்கள்ல தம்பி… இனி இந்த கோட்டை தாண்டி நீங்களும் போக முடியாது… அவிய்ங்களும் வரமாட்டாங்ய்க.. நான் சொல்றது எதாவது புரிஞ்சிதா?

பகத் பாசில்: ஒண்ணும் புரியல

உதயநிதி: அதான் படம் எடுத்த எங்களுக்கே எதுவும் புரியல… ஒருவேளை கமல் ரசிகர்கள்லாம் சேந்துகிட்டு பழைய தேவர்மகன் விவகாரத்துல நம்ம இயக்குநர் மாரி செல்வராஜை பழிவாங்குறாங்களோ?

வடிவேலு: அதாவது நான் இப்ப என் சொல்றதுன்னா.. செல்லம் இந்தபகத்பாசில் மாமா கிட்ட அப்படி என்னதான் புடிச்சிருக்கு? அவரோட முறுக்கு மீசையா? ஒல்லிக்குச்சி ஒடம்பா? அப்டின்னு கேக்கலாம்னு பாக்கறேன். இந்த வீடியோ எடிட் பண்ணிப்போடற ஒரு பயலும் கைல சிக்க மாட்டறான்.

உதயநிதி: சரிவுடுங்க.. இன்னும் நிறைய வீடியோ.. தமிழ்ல இருக்க எல்லா பாட்டையும் சேத்து போடட்டும்.. ஓடிடிலயும் படம் ஓடணும்ல.. என்ன நடந்தாலும் நமக்கு லாபம்தானே… நான் வேற இதுதான் என்னோட கடைசி படம்னு கமிட் ஆயிட்டேன்.

பகத் பாசில்: ஆமா… ஒண்ணு கேட்டா கோச்சிகிட மாட்டீங்களே… இந்த தமிழ்க்காரங்களுக்கு உண்மையிலேயே எம் மேல அவ்வளவு லவ்வா?

உதயநிதியும் வடிவேலுவும் கோரஸாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு: எங்கள வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

தூரத்திலிருந்து அண்ணே என்னன்னே இப்படி ஆயிப்போச்சு.. என்று தீனக்குரல் ஒன்று ஒலிக்கிறது. சோகமாக மாரி செல்வராஜ் வர, எல்லோரும் ஆஃப் ஆகிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com