நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

விஜய்சேதுபதி எனக்கு போட்டி இல்லை – சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதிக்கும் தனக்கும் போட்டியில்லை என்று கூறியுள்ள சிவகார்த்திகேயன் அவருடன் சேர்ந்து நடிக்கவே ஆசைப்படுவடுவதாக தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அதிதீ ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், “இயக்குநர் மடோன் அஸ்வின் விரும்பினால் அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் பணி புரிய காத்திருக்கிறேன். ‘மாவீரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா? அல்லது இருவரும் இணையும் வேறொரு படம் விரைவில் அறிவிப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு நான் நடித்த படத்துக்கு விகடன் எப்படி விமர்சனம் எழுதியிருந்தார்கள் என்றால், ’கெட்டப் மாற்றுவது மட்டுமே நடிப்பு கிடையாது’ என எழுதியிருந்தார்கள். ஆனால் தற்போது மாவீரன் படத்துக்கு ‘Well done SK’ என்று எழுதியிருக்கிறார்கள்.

எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே போட்டியிருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையில்லை. நான் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்க விருப்பப்படுகிறேன். விரைவில் அது நடக்கும்’ என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com