
தனது நடிப்பின் மூலம் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக வாரிவழங்கிய பிரபல நடிகர் நானா படேகர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75.
இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் நானா படேகர். கோவாவின் டோனா பவுலா பகுதியில் அமைந்திருந்த தனது இல்லத்தில் நானா படேகர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளித்து தீவிரமாக முயற்சி செய்த போதிலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5:20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
நானா முதலில் மேடை நாடகங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். 1978-ல் Gaman திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால் உடனடியாக மிகப்பெரிய நட்சத்திரமாக அவர் உருவாகவில்லை. பல ஆண்டுகள் சிறிய மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த பிறகுதான் அவரது திறமை தேசிய அளவில் கவனிக்கப்பட்டது.
இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். 'பரிந்தா', 'கிராந்திவீர்', 'அப் தக் சப்பன்ஹீ', 'பிரஹார்', 'அங்கார்' மற்றும் 'வெல்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.
தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்திலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.
மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ள நானா படேகருக்கு மத்திய அரசு 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது.
திரைத்துறைக்கு வெளியிலும் நானா படேகர் சமூகப்பணியில் ஈடுபட்டார். குறிப்பாக மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு உதவும் பணிகளில் தனது சம்பத்தியத்தில் பெரும்பகுதியை செலவழித்தார்.
2015-ல் நடிகர் மகரந்த் அனஸ்புரே உடன் இணைந்து Naam Foundation அமைப்பை உருவாக்கி, வறட்சி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டார்.
இன்று அரசியலில் கால்வைக்கத்துடிக்கும் பல நடிகர்கள் மக்கள் பணிகளில் வெறும் ‘நடிகர்களாகவே’ நடமாடிக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் ஆசை துளியும் இன்றி மக்கள் பணிகள் செய்தவர் நானா படேகர். அவருக்கு இறுதி அஞ்சலி