லியோ திரைப்படம்
லியோ திரைப்படம்

லியோ பட 4 மணிக் காட்சிக்கு அனுமதி இல்லை- உயர் நீதிமன்றம்

விஜய் நடித்த லியோ படத்தின் சிறப்புக் காட்சியாக அதிகாலை 4 மணிக்கு அனுமதி அளிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

முன்னதாக, தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகாலை 4 மணிக் காட்சியால் சிரமங்கள், விபத்துகள் போன்றவற்றுக்கு வாய்ப்பு இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காட்சி நேரங்களைக் குறிப்பிட்டு, அதை மீறி திரையிடப்பட்டால் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உள்துறை மூலம் அறிவுறுத்தல் தரப்பட்டு, தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

அதை எதிர்த்தும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிகோரியும் பட நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது. அது விரைவாக இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், 4 மணிக் காட்சிக்கு அனுமதி தர மறுத்துவிட்டார். மேலும், 7 மணிக் காட்சி பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறிவிட்டார். 

முன்னதாக, அரசின் ஆணைப்படி காலை 9 மணிக்குதான் முதல் காட்சி திரையிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com