
ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம் என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இன்று (நவம்பர் 19) சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில், பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.
தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பிரதமர் மோடி முன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், ‘இங்கு ஒரே ஒரு சாதிதான்… மனித சாதி… ஒரே ஒரு மதம் தான் இருக்கிறது, அது அன்பு மதம்… ஒரே ஒரு மொழிதான் இருக்கிறது… அது இதயத்தின் மொழி… ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார்… அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்” என்று பேசினார்.