ஆதி, ஹன்சிகா, முனிஷ்காந்த், ஜான் விஜய், ரோபோ ஷங்கர் ஆகியோரது நடிப்பில் மனோஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாட்னர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆதி, ‘இயக்குநர் மனோஜ் முதன் முதலில் எனக்கு கதையை போனில் தான் சொன்னார். அவர் சொன்ன ஒன்லைன் பிடித்திருந்தால் முழுக்கதையும் கேட்டேன். ரொம்ப பிடித்திருந்தது.
நான் ரொம்ப சீரியஸான படங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது உங்களுக்குத் தெரியும். பாட்னர் படம் அப்படி கிடையாது. ரொம்ப ஜாலியான படம்.
கோட விடுமுறைக்கு சென்று வந்த மாதிரி தான் படப்பிடிப்பு இருந்தது. ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் படக்குழுவின் ஒரே நோக்கம். மக்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்.
தயாரிப்பாளருக்கு இது முதல் படம், எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் தமிழில் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும்.
ரொம்ப யோசிக்காமல் படத்தை பார்த்தீங்கனா கண்டிப்பாக என்ஜாய் பண்ணுவீங்க. கதை, திரைக்கதை என்னனு யோசித்தால், அது உங்களுக்கான படம் இல்லை. இப்போ இருக்கிற மன அழுத்தத்துக்கு தியேட்டருக்கு வந்தீங்கனா கண்டிப்பாக அந்த ரெண்டு மணி நேரம் என்ஜாய் பண்ணுவீங்க.” என்றார்.