பிச்சைக்காரன் -2 செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

பிச்சைக்காரன் -2 செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

விஜய் ஆண்டனியின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான பிச்சைக்காரன் -2 படம், 11 நாட்களில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூளை மாற்று சிகிச்சை, அண்ணன் – தங்கை பாசம், ஏழை – பணக்காரன் பேதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிச்சைக்காரன் -2 உருவாக்கப்பட்டிருந்தது. டி.ராஜேந்தர் போலவே படத்தை தயாரித்து, நடித்து, இசையமைத்து, படத்தொகுப்பு பணியையும் செய்துள்ளார் விஜய் ஆண்டனி. அவருக்கு ஜோடியாக காவ்யா தாப்பரும், அவரின் விசுவாசிகளாக தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் விளம்பரம் மற்றும் தயாரிப்பு செலவு என படம் 30 கோடியில் எடுக்கப்பட்டது.

படம், கடந்த மே -19ஆம் தேதி உலகம் முழுவதும் 1600 திரையரங்கில் வெளியாகியானது. வெளியான 11 நாட்களில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் மட்டுமே இந்தப் படம் ரூ. 6 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இனிவரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிச்சைக்காரன் -2 வெற்றியை தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாகம் எடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com