தயாரிப்பாளராகக் களம் இறங்குகிறார் பிரதீப் ரங்கநாதன்!

PRS01
பி.ஆர்.எஸ்.01
Published on

தமிழ்த் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி பிரபலமான பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.

'பி.ஆர். ஷோ' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதன், தான் தயாரிக்கப்போகும் முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறும்பட இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதன், 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

பின்னர் அவர் இயக்கி, கதாநாயகனாக நடித்த 'லவ் டுடே' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துத் தந்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து 'பி.ஆர். ஷோ-வின்' முதல் தயாரிப்பான 'பி.ஆர்.எஸ்.01' என்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய ஆறு இளம் இயக்குநர்கள் இணைந்து இந்தப் படத்தை இயக்க உள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com