ஜனநாயகன் படம் லீக்- முக்கிய நபர் கைது!

ஜனநாயகன்
ஜனநாயகன்
Published on

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த வாரம் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இணையக் குற்றத்தடுப்பு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முதல் கட்டமாக, ஆறு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

அதைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

உதவித் தொகுப்பாளரான அந்த நபர், தற்போது தயாரிப்பில் இருக்கும் ஒரு படத்திலும் பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. 

அவர் பல்வேறு பணிகளையும் தன்னிச்சையாகச் செய்துவரும் ஒரு பிரீலான்ஸ் பணியாளர் என்பதால், அவர் மீது விசாரணையில் சந்தேகக் கண் ஆழமாகப் பதிந்துள்ளது.  

அவர் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்தே இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com